மருத்துவர்களே கவனியுங்கள் ... இல்லாது போனால் உடன் இருப்பவரலே உங்கள் பெயர் கெட்டு போகக் கூடும்



அன்பு நண்பர்களே,

வணக்கம்.

இன்று மருத்துவ உலகில் சேவை செய்யும் தாயுள்ளம் கொண்ட மருத்துவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அவர்கள் பெயரும் புகழும் அவர்கள் அறியாமலேயே கெட்டு போகிறது. யாரால்? அருகில் அமர்த்திக்கொண்டிருக்கும் கம்பௌண்டர் அல்லது அட்டெண்டரால்.


அப்படி அவர்கள் என்ன செய்கிறார்கள்? மருத்துவ ஆலோசனை அதாவது கன்சல்டேசன் என்று மருத்துவரை சென்று பார்க்கச் சென்றால், 5 அல்லது 10 நிமிட ஆலோசனைக்கு பிறகு "டாக்டர் பீஸ் எவ்வளவு?" என்று நாம் கேட்கிறோம். ஆனால் மருத்துவரோ "பீஸ் வெளியில் அட்டெண்டரிடம் கொடுத்து விடுங்கள்" என்று நாசுக்காக சொல்கிறார். நாமும் அவர்கள் சொல்கிற பீஸ் கொடுத்து விட்டு வருகிறோம். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், அறையில் அமர்ந்திருக்கும் டாக்டரிடம் அந்த அட்டெண்டர் பீஸ் குறித்து எந்த விவரமும் கேட்பதில்லை. ஏதோ அந்த அட்டேண்டர்தான் டாக்டரின் பீஸ் நிர்ணயம் செய்பவர் போல பீஸ் கேட்கிறார். டாக்டர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்று தெரிய வில்லை? கொஞ்சம் வியப்பாக உள்ளது. லஞ்சம் வாங்குகின்றவன் கூட நேரடியாக வாங்குகின்றான். ஆனால் செய்த சேவைக்கு டாக்டர் ஏன் தன்னுடைய பீஸ்-ஐ நேரடியாக வாங்குவதில்லை? ஆனால் இதுவே அவர்களுடைய பெயர் கெடவும் காரணமாக உள்ளது என்பதை அவர்கள் அறியாமல் உள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு இதை சொன்னால் சற்று விளங்கும்.....

நேற்று நான் எனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரிடம் அழைத்து சென்றேன். அவரும் பார்த்து விட்டு இரண்டு ஊஸி போடச் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார். மேலும் வெளில் உள்ள சிஸ்டர் போட்டு விடுவர் என்று சொல்லி அனுப்பிவிட்டார். பீஸ் வெளியில் அமர்ந்து இருக்கும் அட்டெண்டரிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். 'சரி' என்று நாமும் வெளியில் வந்தோம். உடனே அட்டெண்டர் பீஸ் "250 ரூபா கொடுங்க" என்று வெடுக்கென்று கேட்டார்.

எனக்கு சற்று வியப்பு. இருப்பினும், "பரவாயில்லை... டாக்டர் இப்போ ரொம்பதான் முன்னேறி விட்டார் போல... முதல்லே இவ்வளவு கேட்க மாட்டார்... ரொம்ப சிம்பிளான ஆளு எப்படி இப்படி ஆனார் என்று தெரியவில்லை" என்று பலவாறு மனதுக்குள் நினைத்துக் கொண்டே என்னிடம் இருந்த 500 ரூபா தாளை எடுத்து நீட்டினேன். அட்டெண்டர் 'சேஞ்' இல்லே. மருந்து கடையில் 'ஊஸி' மருந்து வாங்கி விட்டு வந்து பணம் கொடுங்க என்று இப்போது அவர் தாயுள்ளத்துடன் சொன்னார்.

நான் ஊஸி வாங்கி வந்து போட்டேன். பின் அம்மாவை அழைத்துக்கொண்டு அப்படியே ஏதோ சிந்தனையில் கிளினிக் வாசல் வரை வெளியில் வந்து விட்டேன். பிறகு உடனே நியாபகம் வந்து பீஸ் கொடுக்க சென்றேன். அப்போது என்னிடம் பீஸ் கேட்ட அந்த அட்டெண்டர் இல்லை. எனவே யாரிடம் பீஸ் கொடுப்பது என்று தெரியாமல் டாக்டர் அறையின் கதவை தட்டி "பீஸ் கொடுக்க மறந்து விட்டேன், வெளியில் அட்டெண்டர் காணோம்" என்றேன். அவரும், "ஓ... அப்படியா... என்றவாறு பீஸ் வாங்க தன கையை நீட்டினார். நானும் என்னிடம் தயாராக வைத்திருந்த 250 ரூபாயை எடுத்து கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து "நான் என் பீஸ்-ஐ ஏற்ற வில்லை. என்னோட பீஸ் அதே 100 ரூபாதான்" என்று சொன்னார்.

நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. 
அட்டெண்டர் வெகு எளிதாக 150 ரூபா வசூல் செய்ய முயற்சி செய்தது தெளிவாக 
இருந்தது. என் அருமையான டாக்டரின் சேவை உள்ளம் இந்த அட்டேண்டரால் 
கெட்டு போனது. அவருடைய மரியாதை உருவம் (Image) முதலில் கலங்கி 
பின் நிலை பெற்றது. இது தேவையா?

இதை டாக்டர் யாராவது படித்தால் அவர்கள் தங்கள் தொழிலை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை சற்றே கூர்ந்து அறியும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

முதற்கண் தயவு செய்து நீங்களே நேரடியாக பீஸ் வங்கிக் கொள்ளவும். பீஸ் போன்ற பண விடயத்தில் உங்கள் அட்டேண்டரின் மூக்கு நுழையாமல் இருந்தால் நன்று.

அடுத்து, உங்களை பார்க்க வரும் நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கி 'appointment' கொடுங்கள். அந்த நேரத்தில் அவர்களை பரிசோதித்து சிகிட்சை தாருங்கள். இவ்வாறு நேரம் ஒதுக்குவதிலும் அடேண்டர்களை முழுமையாக சார்ந்திருக்க வேண்டாம். நேரம் பெற்று வந்த ஒரு நோயாளியை காக்க வைத்தால் அதைவிட கொடுமை வேறு ஏதும் இல்லை. இதிலும் அட்ட்டேன்டர்கள் காசு pannugirargal.

இன்று டாக்டர்களுக்கு நோயாளிகள் பஞ்சமில்லை. அதேபோல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பஞ்சமில்லை. ஆனால் மனிதாபிமானத்திற்கு பஞ்சம் வந்து விடக்கூடாது.

தவிர மேலே இருக்கும் படத்திற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடுத்த பதிவில் ஒரு சம்பந்தம் உள்ளது. அதை நாளை சொல்கின்றேன்.

உங்கள் அன்புக்கு என் நெஞ்சு நிறை நன்றி, வணக்கம்.


பி.ஆர்.ஜெயராஜன்.

Comments

Anonymous said…
இது என்ன அரசு மருத்துவமனையிலா இல்லை தனியார் மருத்துவமனையிலா?
மிகச்சிறந்த கருத்து.

இப்படி ஒரு சிக்கல் நடப்பது பல மருத்துவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
//இது என்ன அரசு மருத்துவமனையிலா இல்லை தனியார் மருத்துவமனையிலா?//

எனக்கு ஏற்பட்ட அனுபவம் தனியார் மருத்துவமனை ஒன்றில்...
//இப்படி ஒரு சிக்கல் நடப்பது பல மருத்துவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்//

மிகச் சரி மருத்துவர் புருனோ அவர்களே... இதை சீர் செய்து மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தங்கள் தரப்பில் ஏதும் செய்யுங்களேன் அய்யா...
Thomas Ruban said…
மிகச்சிறந்த கருத்துக்கள்.

//இன்று டாக்டர்களுக்கு நோயாளிகள் பஞ்சமில்லை. அதேபோல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பஞ்சமில்லை. ஆனால் மனிதாபிமானத்திற்கு பஞ்சம் வந்து விடக்கூடாது.//

கரெட்டா சொன்னிங்க சார்.
Maximum India said…
நல்ல பதிவு.

மருத்துவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவர்களுக்கும் நல்லது. அவர்களை நம்பி வரும் நோயாளிகளுக்கும் நல்லது.

நன்றி.
//மிகச்சிறந்த கருத்துக்கள்.//

நன்றி தமாஸ் ரூபன் சார்...
//மருத்துவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவர்களுக்கும் நல்லது. அவர்களை நம்பி வரும் நோயாளிகளுக்கும் நல்லது//

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி மேக்சிமம் இந்தியா...

கிட்டத்தட்ட எல்லா தனியார் கிளினிக்களிலும் பீஸ் வாங்குவதில் இந்த நடைமுறையையே மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர். இதுதான் ஏன் என்று தெரியவில்லை..

ஒரு வழக்குரைஞராக நானே எனது கட்சிக்காரரிடமிருந்து நேரடியாக பீஸ் வாங்குகின்றேன். அதை வாங்கும் அதிகாரத்தை நான் என் குமாஸ்தாவிடம் எப்போதும் கொடுத்ததில்லை. வேண்டுமானால் அவருக்கு தனியாக 50 அல்லது 100 ரூபா கொடுத்து விட்டு போங்கள் என்று எனது கட்சிக்காரரிடம் சொல்லி உள்ளேன்.
ஆனால் நேரடியாக பீஸ் பெற்றுக் கொள்ள மருத்துவர்களுக்கு பயம் ஏதும் உண்டா? அல்லது நிறைய பீஸ் கேட்கிறோமே என்ற உறுத்தல் அவர்களுக்கு ஏற்படுகிறதா..?
அல்லது கேட்கும் பீஸ் குறித்து நோயாளி பேரம் ஏதும் பேசுவர் என்று சங்கடமா?
என்ன காரணம்?