அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஹிஸ்பானிக் இன பெண்மணி நியமனம்



அமெரிக்காவின் முதலாவது ஹிஸ்பானிக் இன உச்ச நீதிமன்ற நீதிபதியாக சோனியா சோடோமேயர் நேற்று முன்தினம் (08/08/09) பதவியேற்றுள்ளார். மேலும் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமரும் வாய்ப்பைப் பெற்ற மூன்றாவது பெண்ணாகவும் திகழ்கிறார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 220 ஆண்டு கால வரலாற்றில் ஒரு ஹிஸ்பானிக் இனத்தவர் நீதிபதியாவது இதுவே முதன்முறை. அதுபோல பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு அவர் நியமனம் செய்யும் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இவர்தான்.

இவர் இம்மாதம் 6-ஆம் தேதியில் செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 68 31 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவானார். அவரது தெரிவுக்கு 59 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் 9 குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர்.

அமெரிக்காவின் அதி உயர் அதிகாரத்துவம் பொருந்திய உச்ச நீதிமன்றமானது அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை பொருந்தியது. இந்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அவர் தனது ஆயுள் முழுவதும் அப்பதவியை தொடர்ந்து வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோனியா சோடோமேயர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றார்.

அவரருகே அவரது தாயாரும் சகோதரரும் நின்றிருந்தனர். இதன்போது நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் தனது கடமைகளை நிறைவேற்றுவதாக சோடோமேயர் உறுதியளித்தார்.

புயர்டோ றிக்காவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்த சோடோமேயர், நியூயார்க்கிலுள்ள பொதுக் குடியிருப்பில் வாழ்ந்தார்.அவருக்கு 9 வயதாக இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட, பெரும் பொருளாதார நெருக்கடி மத்தியில் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். 1979 ஆம் ஆண்டு சட்டத் துறையில் பட்டம் பெற்ற சோடோமேயர், நியூயார்க் நகரிலுள்ள வழக்குரைஞர் ஒருவரின் உதவியாளராக தனது சட்டத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

Comments

Maximum India said…
பகிர்வுக்கு நன்றி ஐயா!
//பகிர்வுக்கு நன்றி ஐயா!//
நன்றி ஐயா.
Snippy.. said…
very informative., and thank you for sharing it with us sir..,
//very informative., and thank you for sharing it with us sir..,//

Thanks Snippy...