Photos of attack by Tamil Nadu Police on Chennai Advocates
தமிழக காவல் துறையினர் சென்னை வழக்குரைஞர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்கள் காட்சிகள். இதை கண்டு உங்கள் மனம் துயருற்றால் ஆறுதலுக்கு ஒரு வார்த்தை பின்னூட்டம் இடுங்கள். நன்றி...
சட்டப்பார்வை - சட்டம், சட்டக்கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்காக வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன் எழுதி வரும் வலைப்பதிவு இது.
Comments
இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை தொலைக்காட்சியில் கண்டு மனம் பதைபதைத்த நான் உடனடியாக ஒரு பதிவு இட்டேன்.
என்னுடைய பதிவில் இருந்து சில வரிகள்
''ஒரு வேளை, இலங்கை தமிழர் பிரச்சினை முதலான பல சமூக பிரச்சினைகளில் முன் நிற்கிற வழக்கறிஞர்களுக்கு "ஒரு சரியான பாடம்" கற்பிக்கவே இந்த தாக்குதல் என்றால், இதற்கும் "என்கௌண்டேர்களுக்கும்" என்ன வித்தியாசம் இருக்கிறது? இது ஒரு தவறான அணுகுமுறை அல்லவா? இந்த தாக்குதல்களால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா? மேலும் விரோதங்கள் அல்லவா வளரும்''
காயம்பட்ட வழக்கறிஞர் சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமாகவும் வேண்டிக் கொள்கிறேன். உங்களது அறப் போராட்டம் விரைவில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
நன்றி.

தங்கள் சொல்வது நியாயமே!
தங்கள் ஆறுதல் வார்த்தைகள் காயங்களுக்கு மருந்து...
தவிர, தங்கள் முகவரிக்கு நான் அனுப்பும் சட்டப் பார்வை இதழ் கிடைகிறதா?
சென்ற மாதம் நீங்கள் எழுதிய "வாழ்வில் என்றும் உற்சாகமாக இர்ருக்க வேண்டுமா?" என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.
சட்டப்பார்வை. நல்லாயிருக்கு.
உலக சினிமா பார்வை பற்றி என் வலைக்கு அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி.
சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை பொலிசாரின் கைகள் பல நாட்களாகவே ஓங்கி இருந்தது. ஜாமீன் பெறுவது என்பது பொலிசாரின் கனிவு பார்வை இல்லை என்றால் கிடைகாது. நான் என்ன கூற வருகிறேன் என்பது புரிந்திருக்கும் . அந்த அளவுக்கு போலீசார் தங்கள் திறமை யை காட்டி ( காலில் விழுவது போல் பவ்யமாக நடந்து ) சாதித்தனர். இது பல சமயங்களில் வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். ஒரு முறை ஒரு நீதிபதி தாகபட்டதும் இதே காரணதுக்க்காகதன். அனால் வழக்கம் போல போலீசார் தங்கள் புத்தியை காட்டிவிட்டனர். நீதிபதி மண்டையை அடித்து உடைத்து தங்கள் தலையில் தாங்களே மண் வாரி போட்டு கொண்டனர். எட்டாங்க்லாஸ் படித்த கான்ஸ்டபிள் கு வக்கீல் யார் நீதிபதி யார் என்று தெரியும் ? எல்லாம் கருப்பு கோட் ஆகத்தான் தெரியும்,இதன் விளைவுகள் இன்று தெரியாது . அவர்கள் தங்களது உரிமை மற்றும் தயை பெரும் தன்மை யை கோர்ட் வளகதிற்குள் இழந்து விட்டனர்.
மேலும் துண்டு பிரசுரத்தை பொது மக்களிடம் விநியோகிதர்களே அதற்கு யாரவது செவி சாய்தர்களா ? ஜனநாயகம் பின்பற்றப்படும் ஒரு நாட்டில் தங்களை கண்டால் எல்லோரும் நாடு நடுங்க வேண்டும் என்று இன்றும் ஆசைப்படும் ஒரு கூட்டம் எப்படி மக்கள் அபிமானம் எனும் உயரியத்தை அடைய ஆசைபடலாம். அடித்து நொறுக்கி விட்டு நாங்கள் எங்கள் கடமைதான் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள். இன்று இவர்களை சும்மா விட்டு விட்டால் அடிப்பது எங்கள் பிறப்புரிமை என்று எண்ண துவங்கிவிடுவார்கள்.
அதை தடுக்கவே இவ்வளவு நடவடிக்கையும் .....