The Feelings - வழக்குரைஞர்களின் போராட்ட உணர்வுகள்...



பிப்ரவரி 19- ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தமிழக காவற்படை கண்முடித்தனமாக தாக்கிய விவகாரத்தில் வழக்குரைஞர் சமூகத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஒருபுறம் என்றால், அச்சம்பவத்தை விசாரிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட நீதியரசர் கிருஷ்ணா கொடுத்த அறிக்கையால் விளைந்த வேதனை மற்றொரு புறம்.

இத்தனை நாளாக போராடுகின்றோம் .... வழக்குரைஞர்களை தாக்கிய காவல் துறை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் எப்படி நீதிமன்றத்திற்கு செல்வது என்ற ஒரு மனக் குழப்பம் இன்னொரு பக்கம்.

இடையில் ஆளும் அரசியல் கட்சியை சார்ந்த வழக்குரைஞர்கள் இதையே ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி தங்கள் அரச விசுவாசத்தை காண்பிக்கிறார்கள், நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி. அதை எதிர் கட்சி (வழக்கில் அல்ல, அரசியலில்) வழக்குரைஞர்கள் தடுத்து தங்களுக்கு ஒரு பெயர் பதிவை அக்கட்சியில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்..

இந்த விவகாரத்தை தமிழக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை... இவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு, எப்படியும் போராட்டத்தை பிசுபிசுசுத்து போகச் செய்து விடுவார்கள் என்றே காத்து கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றம் சென்றால்தான் வருமானம். கடந்த 25 நாட்களாக நீதிமன்றத்தை வழக்குரைஞர்கள் புறக்கணித்து வருகின்றனர். சுத்தமாக வருமானம் இல்லை. கொஞ்சம் செல்வ செழிப்பாக உள்ள வழக்குரைஞர், ஒன்றுக்கு இரண்டு தொழில் செய்பவர்கள், அரசியல் செய்யும் வழக்குரைஞர்கள் ஆகிய இவர்களுக்கு கவலை இல்லை. சமாளித்து கொள்வார்கள். ஆனால், நீதிமன்ற வருமானத்தை மட்டுமே நம்பி, வேறு எதுவும் தெரியாமல் அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கும் வழக்குரைஞர்கள் பாடு உள்ளபடியே திண்டாட்டம்தான். குறிப்பாக அன்றாட வருமானத்தை தரும் குற்றவியல் நீதிமன்றப் பணி மட்டும் கொண்ட வழக்குரைஞர்கள் மிகவும் சோர்ந்து போயிருக்கிறர்கள், இந்தப் போராட்ததால். எனினும் சங்கத் தலைமை கருதி அமைதி காக்கிறார்கள்.
போராட்டம் வெற்றி பெற வேண்டும்... அப்போதுதான் வழக்குரைஞர்கள் கௌரவம் காவல்துறை மத்தியில் நிலை நாட்டப்படும் என்ற உணர்வும் ஆழமாக உள்ளது...

இப்படி பல்வேறு உணர்வுகள் மனதில் நிழலாட வழக்குரைஞர்கள் போராடி வருகிறார்கள். கூட்டமைப்பில் கூடி விவாதிக்கிறார்கள் ......

போராட்டம் வெற்றி பெற வேண்டும்.... வெற்றி பெறும்.....

Comments

Maximum India said…
சுதந்திர போராட்டம் முதல் பல சமூக விழிப்புணர்வு போராட்டங்களை சுயநலம் பாராமல் முன்னின்று நடத்தியவர்கள் வழக்கறிஞர்களே. ஆனால் இன்றைக்கு அவர்கள் முதன்முறையாக தங்களுக்காக போராடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக மக்களோ அல்லது ஊடகங்களோ பெருமளவுக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பது மனதை சங்கடப் படுத்துகிறது.

தினசரி வருமானத்திற்கு அன்றாட வழக்குகளையே நம்பியுள்ள வழக்கறிஞர்களின் நிலை பரிதாபத்துக்குரியதே. ஆயினும் நியாயத்திற்காக அவர்கள் செய்யும் தியாகத்திற்கு பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்று நம்புகிறேன்.

உங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள ஐயா!

உங்கள் பதிவினை "தமிலிஷ்" இணையத்தில் இணைத்துள்ளேன். அங்கு உங்கள் பதிவு "பாப்புலர்' ஆக தேர்வு செய்யப் பட்டுள்ளது. உங்கள் கருத்துகள் பலரிடம் சென்று சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.
Anonymous said…
அண்ணே , கிரிமினல்கள் எல்லாம் வக்கீல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றனர் ,

உண்மையான வக்கீல்கள் அவர்களை தட்டிக் கேட்பதில்லை ,

அப்புறம் எப்படி பொதுஜனம் ?

வக்கீலகள் என்றாலே கேவலமாக பார்க்கப் படும் நிலை உருவாகிவிட்டது எனப்தை உணர்கிறீர்களா ?
//ஆயினும் நியாயத்திற்காக அவர்கள் செய்யும் தியாகத்திற்கு பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்று நம்புகிறேன். உங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன். //

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி Maximum india அய்யா.

அதுபோல் இந்தப் பதிவை தமிலிஷ் -இல் இணைத்து முதலிடம் பெற வழி வகுத்தமைக்கும் நன்றி அய்யா..
// அண்ணே , கிரிமினல்கள் எல்லாம் வக்கீல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றனர் ,
உண்மையான வக்கீல்கள் அவர்களை தட்டிக் கேட்பதில்லை , //

அண்ணே....., நம்ம போராட்டத்துக்கு அடுத்தப்போல அவுகளை தட்டி கேக்க போரோம்லே...
களை பிடுங்கற நேரம் வந்துடிச்சி அண்ணே.....
//வக்கீலகள் என்றாலே கேவலமாக பார்க்கப் படும் நிலை உருவாகிவிட்டது எனப்தை உணர்கிறீர்களா?//

அண்ணே.... நாம பொது ஜனத்துக்கும் சேத்தே போராட்டம் பண்றோம் அண்ணே.....

போலீஸ் கார அண்ணாச்சிகளை எதிர்த்து கேள்வி கேக்குற ஒரே சாதி நம்ம வக்கீல் சனம்தான். பப்ளிக் ஒருத்தனை போலீஸ் அடிச்சா மனித உரிமை மீறிட்டாங்க என்னு கதறி கிட்டே எங்கே வரீங்க அண்ணே? வக்கீல் கிட்ட தானே அண்ணே.. !இப்போ அவுக எங்க மேலேயே கை வெச்சிடாக... இதை இப்படியே விட்டா போலீஸ் கை ரொம்ப நீண்டிரும் அண்ணே... அப்புறம் போலீஸ் கையால தேவை இல்லமே அடி வாங்குன பொது ஜன மக்களுக்காக நாம என்ன அண்ணே செய்ய முடியும்?

உங்க சப்போர்ட் எல்லாம் வேணும் அண்ணே... இதை பொது ஜனம் நீங்க உணரனும் அண்ணே.
Maximum India said…
ஐயா ஒரு கவிதை இங்கே.

அவர்கள் கம்யுனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
காரணம் நான் தொழிற்சங்கவாதியும் கூட இல்லை

அப்புறம் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை.
ஏனென்றால் நான் யூதன் கூட இலலை

கடைசியாக என்னை தேடி தேடி வந்தனர்
குரல் கொடுக்க யாரும் இலலை
காரணம் அங்கு யாருமே இலலை.

ஹிட்லரின் ஆதரவாளராக இருந்து பின்னர் எதிர்ப்பாளராக மாறிய மார்ட்டின் நீமுல்லேர் என்பவரால் ஜெர்மெனியின் நாஜி காலத்தில் எழுதப்பட்டது. இந்த கவிதை. நாஜிகளின் முதல் இலக்கு கம்யூனிஸ்ட்கள், பின்னர் அவர்களின் இலக்குப் பட்டியல் தொழிற்சங்க வாதிகள், பத்திரிக்கையாளர்கள், யூதர்கள் என நீண்டு கடைசியாக சர்ச்சுகளில் வந்து முடிந்தது என்பதையும் நாஜிகள் முதலிலேயே அனைவராலும் தடுக்கப் பட்டிருந்தால் அவர்கள் கொடுமை பட்டியல் நீண்டிருக்காது என்பதையும் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கவிதை இப்போதைய வக்கீல்கள் போராட்டத்திற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

//போலீஸ் கார அண்ணாச்சிகளை எதிர்த்து கேள்வி கேக்குற ஒரே சாதி நம்ம வக்கீல் சனம்தான். பப்ளிக் ஒருத்தனை போலீஸ் அடிச்சா மனித உரிமை மீறிட்டாங்க என்னு கதறி கிட்டே எங்கே வரீங்க அண்ணே? வக்கீல் கிட்ட தானே அண்ணே.. !இப்போ அவுக எங்க மேலேயே கை வெச்சிடாக... இதை இப்படியே விட்டா போலீஸ் கை ரொம்ப நீண்டிரும் அண்ணே... அப்புறம் போலீஸ் கையால தேவை இல்லமே அடி வாங்குன பொது ஜன மக்களுக்காக நாம என்ன அண்ணே செய்ய முடியும்?//

இந்த போராட்டத்தை வெறுமனே நீதியின் இரண்டு தூண்களுக்குள் நடக்கும் போராட்டம் என்று மட்டுமே எண்ணி பொது மக்கள் ஒதுங்கி போகாமல், அத்துமீறலை வாடிக்கையாக கொண்டுள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசினை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே சொன்னபடி பல சமூக போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள். அவர்களுக்கு இந்த சமயத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டியது பொது மக்களின் கடமை என்றே நினைக்கிறேன்.

நன்றி.
//நாஜிகள் முதலிலேயே அனைவராலும் தடுக்கப் பட்டிருந்தால் அவர்கள் கொடுமை பட்டியல் நீண்டிருக்காது//

இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்....
இல்லாது போனால் தமிழக போலீஸ் நாஜி ஆவது உறுதி.

நமது பேரணி வருகின்ற 19 -ஆம் தேதி சென்னை-இல் நடக்க உள்ளது...
வக்கீல் பேரணி-இல் வேறொரு அணியும் கலந்து கலவரம் உருவாகலாம் என நம்பப் படுகிறது.... இம்முறை வக்கீல்களின் நேரம் என்றும் பேசப்படுகிறது...
சென்ற மாதம் இதே 19-ஆம் தேதியில்தான் போலீஸ்காரர்கள் அடித்தார்கள்.. இம்முறை...?
Unknown said…
ஒரு இந்திய பிரஜையை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் தாக்கியது சரியா தவறா ?
//ஒரு இந்திய பிரஜையை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் தாக்கியது சரியா தவறா //

அந்த நீதியரசர்களேயே காவல் துறை அனுமதி இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் புகுந்து தாக்கியது மட்டும் சரியா? இதற்கு பதில் சொன்னால் நான் அதற்கும் பதில் சொல்வேன்....
//இப்படி பல்வேறு உணர்வுகள் மனதில் நிழலாட வழக்குரைஞர்கள் போராடி வருகிறார்கள். கூட்டமைப்பில் கூடி விவாதிக்கிறார்கள் ...... //

இங்கு மக்களுக்கு நீதியைபெற்றுதறுபவர்களுக்கே நீதிகிடைக்கவில்லை கடைகோடி மக்களுக்கு எப்படி கிடைக்கும்... தர்ம அடிதான் கிடைக்கும் ஆதாலால் தான் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளும் குண்டர்களும் நாடாளுகின்றனர்....
இதுபோல் வழக்கறிஞர்கள் போர்வையில் சில பொறுக்கிகள் சட்டப்பூர்வமாக சந்திக்க இயலாமல் நீதிமன்ற வளகத்திலேயே அடிப்பதும் தற்பொழுது அதிகமாக நடைபெற்று வருகின்றது... இதுபோல் குள்ளநரிகளை தங்கள் இனம் கண்டு தண்டிக்கவேண்டுகின்றேன்...
//இங்கு மக்களுக்கு நீதியைபெற்றுதறுபவர்களுக்கே நீதிகிடைக்கவில்லை//

எதிர்பார்த்த நீதி கிடைத்து விட்டது தமிழ். சரவணன். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தருமமே வெல்லும்....
//இதுபோல் குள்ளநரிகளை தங்கள் இனம் கண்டு தண்டிக்கவேண்டுகின்றேன்...//

இந்த சம்பவத்தால் ஒரு பெரும் படிப்பினை உருவாகி உள்ளது...

நீங்கள் குறிப்பிடும் அவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வழக்குரைஞர் சங்கமும், தமிழ் நாடு வழக்குரைஞர் பெருமன்றமும் தயாராகி வருகிறது....