Fasting by Salem Advocates
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை கண்மூடித்தனமாக நடத்திய கொடூர தடியடி தாக்குதலில் எண்ணற்ற வழக்குரைஞர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; மண்டை உடைந்தது. அதை கண்டித்து சேலம் வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் மண்டை ஓடுகளுடன் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. பி. பரமசிவம் முன்னிலை வகித்தார். சேலம் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் திரு. கா. இராஜசேகரன் தலைமை வகித்தார்.
படத்தொகுப்பு - சட்டப்பார்வை, பி.ஆர்.ஜெ.
9843035132
Comments
அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்.
உங்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் இது பற்றி ஒரு தனி பதிவு கூட போட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post_241.html
நன்றி.
ஆம் நான் பார்த்தேன்... விடை தெரியா வினாக்கள் இந்த பிரச்சனையில் நிறைய உண்டு. நீதிமன்றத்தில் நுழைந்து கைது செய்ய யார் ஆணையிட்டது என்ற வினாவுக்கு இன்னும் விடை இல்லை..
6-ஆம் தேதி வாய்தா. தீர்ப்பு என்னவாக இருக்க முடியும்? மாண்பமை தலைமை நீதியரசர் கே.ஜி.பி., நீதிமன்ற புறக்கணிப்பு என்ற கருத்து படிவத்திற்கு எதிரானவர். உயர் போலீஸ்காரரை பதவி நீக்கம் செய்ய ஆணையிட வாய்ப்பில்லை. ஆனால் இதுதான் சென்னை சங்கம் கேட்பது.
இன்று கூட மதுரையை சேர்ந்த ஒரு வக்கீல், "பீடா கடை வைக்கலாமேன்னு இருக்கேன்னே". என்று செல்லிடபேசினார். மனம் நொந்து இருந்தார். ஆறுதல் கூறினேன்.
எந்தப் புள்ளியிலவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற மனநிலை, வேட்கை வக்கீல் சங்கத்திற்கும் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் தவறு இருப்பதாக கூற முடியாது.
ஆனால் இனி காவல் துறை எப்படி வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் உறவாட போகிறது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திற்கு வக்கீல் சென்று தன் கட்சிகாரரின் பிரச்னை பற்றி பேச முடியுமா? அதுபோல் காவலர் நீதிமன்றத்தில் இயல்பாக வந்து போய் விட முடியுமா?
காலம்தான் மருந்து!