வலை பதிவு வரலாற்றில் ஓர் முக்கிய பதிவு... போராட்டம் வெற்றி...

Comments

Maximum India said…
வழக்கறிஞர்களின் போராட்ட வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எவ்வாறு என்பதை பற்றி நானே ஒரு விரிவான பதிவு இடலாமென்று இருக்கிறேன்.

கடுமையான பொருளாதார வாழ்வியல் போராட்டங்களுக்கும் இடையேயும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக ஒரு மாத காலம் தொடர்ந்து நடத்தியதற்கு என் முதல்கண் வாழ்த்துக்கள். சுதந்திர போராட்டத்திலும், சமூக விழிப்புணர்வு போராட்டங்களிலும் போராடி வெற்றி பெற்று நாட்டிற்கு பல நன்மைகள் விளைய காரணமாக இருந்த வழக்கறிஞர் சமுதாயம் இப்போது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றதற்கு இரண்டாவது வாழ்த்துக்கள்.

அதே சமயம், காந்தி, நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களை உள்ளடக்கிய பழம் பெருமை வாய்ந்த வழக்கறிஞர் சமுதாயத்திலே வன்முறையை நம்பும் சிலர் தற்போது கலந்து இருப்பது வருந்தத் தக்கது. அவர்களை நல் வழி படுத்துதல் அல்லது களைதல் ஆகியவை உங்களை போன்ற மூத்த வழக்கறிஞர்களின் பொறுப்பு ஆகும்.

நன்றி.
//கடுமையான பொருளாதார வாழ்வியல் போராட்டங்களுக்கும் இடையேயும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக ஒரு மாத காலம் தொடர்ந்து நடத்தியதற்கு என் முதல்கண் வாழ்த்துக்கள்.//

தங்கள் வாழ்த்துகளுக்கு எங்கள் வழக்குரைஞர்கள் சமூகம் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
//இப்போது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றதற்கு இரண்டாவது வாழ்த்துக்கள்.//

அதே நேரத்தில் இதை முழுமையான வெற்றி என பாவிக்க முடியாது.. இந்த வெற்றியை ஒரு தொடக்கமாக காண்கின்றோம்.

அந்த இரண்டு காவல் ஆணையர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு (அவசர மனுவாக) தாக்கல் செய்கின்றனர். அதில் என்ன ஆணை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது என்பதை அனுசரித்து நமது போராட்டத்தின் பாதை அமையும்..

இன்னும் மைய புலனாய்வு துறையினரின் புலனாய்வு முடியவில்லை. அதன் அறிக்கை எப்படி இருக்கும் என்பதயும் கவனிக்க வேண்டி உள்ளது...

அடுத்து நேற்று முன் தினம் உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்ய உள்ளார்.

இப்படி பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை...

எனினும் தங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகள் எங்களை நிச்சயம் வாழ வைக்கும்.. மீண்டும் நன்றி..
//வன்முறையை நம்பும் சிலர் தற்போது கலந்து இருப்பது வருந்தத் தக்கது. அவர்களை நல் வழி படுத்துதல் அல்லது களைதல் //

அவர்களை நல்வழி படுத்த சில காலம் அவர்களை களைந்து வைக்க வேண்டும்.
Tech Shankar said…
Thanks for sharing it
//Thanks for sharing it//

Pleasure is mine tamil nenjam...