ஓட்டு போட உங்களுக்கு விருப்பம் இல்லையா...? - Are you deciding not to vote?
தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. 'இன்னும் சரியாக மைக்கே பிடிக்கவில்லை', அதற்குள் கைது செய்து விட்டார்களே என்று புலம்பும் இளம் அரசியல்வாதி ஒருபுறம். மக்களுடன் தான் எனது கூட்டணி' என்ற தன்னம்பிக்கை முழக்கமிடும் நடிக அரசியல்வாதி மற்றொரு புறம். 'அரசியலில் இதல்லாம் சகஜமப்பா' என்று கூறக் கூடிய வியத்தகு "கூட்டணிகள்" இன்னொரு புறம். இவற்றிக்கு இடையில் மக்களை மெஸ்மரிசம் செய்யும் பிரச்சாரங்கள்.... வண்ண வண்ண வாக்குறுதிகள்.... இப்படி அரசியல் தலைவர்கள் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை மக்களிடம் கையேந்தும் ஜனநாயக பண்டிகை கோலாகலமாக ஆரம்பித்து விட்டது.
ஆனால் மக்கள் முன்பு மாதிரி இல்லை. சமூகம், சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக அவர்களுக்கு அனைத்திந்திய மற்றும் உலக பார்வை ஏற்பட்டுள்ளது. எனவே சிந்திக்க ஆரம்பித்து உள்ளனர். 'இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு ஓட்டு போடலாம்!' என்று சிந்திக்கும் அதே வேளையில் 'அப்படி போட்டால் என்ன நன்மை நமக்கு விளையும்' என்பதையும் நன்றாகவே யோசிக்கின்றனர். ஆகவே உள்ளபடியாக நல்ல அரசியல் பதிவுகள் அல்லது மக்கள் நலனுக்காக பாடுபடும் எண்ணம் மற்றும் வல்லமை கொண்டவர்களை மட்டுமே மக்கள் தேர்தெடுக்க விழைகின்றனர் என்று சொன்னால் அதை மிகையானது என்று ஒதுக்கி விட முடியாது. சுருங்கச் சொன்னால் மக்களின் ஓட்டை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது, வேட்பாளர்கள்.
நிலைப்பாடு இவ்வாறு இருக்க, தான் நினைத்த நல்ல கட்சி அல்லது நல்ல வேட்பாளர் தேர்தலில் நிற்கவில்லை அல்லது நின்றுள்ள கட்சி அல்லது வேட்பாளர் நல்லது செய்யக்கூடியவர் அல்ல; தனக்கு பிடிக்கவில்லை என்று பொது ஜனம் ஒருவர் நினைத்தால், அவருக்கு என்ன தீர்வழி? சுருங்கச் சொன்னால் தனக்கு ஒட்டு போட விருப்பம் இல்லை என்று நினைக்கும் பொது ஜனம் அதை எப்படி சட்டப்படி தெரிவிப்பது?
இதற்கு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'தேர்தல்கள் நடத்தும் விதிகள்' (Conduct of Elections Rules, 1961) வகை செய்கின்றன. ஒட்டு போட வேண்டும் என்பது ஜனநாயக கடமை என்று எவ்வாறு கூறப்படுகிறதோ, அவ்வாறே ஒட்டு போட தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஒருவர் கூறலாம். இந்த விதிகளின் பகுதி 4-இன் கீழ் வரும் 2-ஆம் அத்தியாயம் 'மின்னணு ஒட்டு போடும் இயந்திரம் மூலம் ஒட்டு போடுதல்' (VOTING BY ELECTRONIC VOTING MACHINES) பற்றி கூறுகிறது. அதில் வரும் விதி 49-O பின்வருமாறு கூறுகிறது.
49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.
ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்யும் வாக்காளர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
"வாக்காளர் ஒருவர், அவரது வாக்காளர் பட்டியல் எண் ஆனது வாக்காளர் பதிவேட்டில் படிவம் எண் 17A -இல் உரியவாறு பதிவு செய்யப்பட்டும், மேலும் அதன் பேரில் விதி 49L-இன் உள் விதி (1)-இன்படி வேண்டுறுத்துகிறவாறு அவர் தனது கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை இட்டதற்கும் பிறகு, ஒட்டு போடுவதில்லை என்று முடிவு செய்தால், அதற்கு செயலாக்கம் தருவதற்கான குறிப்பு ஒன்று படிவம் எண் 17A- இல் மேற்சொன்ன பதிவுக்கு எதிராக தலைமை அலுவலரால் செய்யப்பட வேண்டும். மேலும் அந்த குறிப்புக்கு எதிராக வாக்காளரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை பெறப்பட வேண்டும். " - விதி 49-O.
இப்படி ஒரு சட்ட விதி இருப்பதை அரசு ஏன் மக்களுக்கு பிரசாரம் செய்யவில்லை?
இப்படி ஒரு சட்ட விதியை மேற்சொன்ன 'தேர்தல்கள் நடத்தும் விதிகளில்' சேர்த்ததன் மூலம் நமது நாடாளுமன்றம் அடைய நினைத்தது என்ன?
இவ்விதியால் யாருக்கு என்ன இலாபம்?
விவரம் தெரிந்தவர்களை விவாதிக்க அழைப்பு விடுக்கிறேன்..
Comments
//கலக்கல்:-)//
Satta Parvai said...
நன்றி அய்யா.....
FYI.
Question:
IS there any such section in Indian constitution (Section " 49-O") which gives the right for 'Not to vote' or ' I VOTE NOBODY' ? I have received mails regarding this, which says that if there are more votes for this option than all other candidates then that polling will be cancelled and will have to be re-polled. Not only that, but the candidature of the contestants will be removed and they cannot contest the re-polling, since people had already expressed their decision on them.
I want to know is there any reality behind this or just a rumour that we encounter everyday in our life?
Answer:
Yes. Such a provision exist. It is not in the Constitution of India but in "Conduct of Election Rules 1961" Its extract is given below:
49-O. Elector deciding not to vote.- If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark
Re: Section " 49-O" of Indian Constitution
--------------------------------------------------------------------------------
Following para 7 of Proposed Electoral Reform will clear all your doubts. This has been only a proposal and has not been implemented yet. It also mentions that a case in pending before Hon'ble Supreme Court on this matter.
7. NEGATIVE / NEUTRAL VOTING
The Commission has received proposals from a very large number of individuals and organizations that there should be a provision enabling a voter to reject all the candidates in the constituency if he does not find them suitable.
In the voting using the conventional ballot paper and ballot boxes, an elector can drop the ballot paper without marking his vote against any of the candidates, if he chooses so. However, in the voting using the Electronic Voting Machines, such a facility is not available to the voter.
Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know about the decision of such a voter.
The Commission recommends that the law should be amended to specifically provide for negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the entry relating to the last candidate, there shall be a column "None of the above", to enable a voter to reject all the candidates, if he chooses so. Such a proposal was earlier made by the Commission in 2001 (vide letter dated 10.12.2001).
(A petition by the People's Union for Civil Liberties seeking such a provision filed at the time of the recent general elections is pending before the Hon'ble Supreme Court)
And still more on the subject...
‘Not to vote option will not affect result’
New Delhi, Dec. 6: "Not to vote" option given to voters would not affect the winning chances of a candidate in an election, the Election Commission has said. "The voters who exercise the option of not voting at the election under Rule 49-0 would only be deemed to have abstained themselves from voting and under the law, the candidate who secures the highest number of valid votes polled, irrespective of his winning margin, is declared elected," the EC said.
The EC was reacting to reports that if the number of voters, who choose to exercise the option of not to vote exceeds the margin of votes secured by the winning candidate over the runner up, then it should invalidate the election and a repoll should be held. Under Rule 49-0, a voter has the option of not to vote after he has been identified at the polling station and his name will be registered in register of voters. The presiding officer would then make a note to that effect against the name of that particular voter and obtain his or her signature, the EC clarified.
டி.எஸ்.ராஜன்
//Following details were browsed and saved by me//
ஜெயராஜன் சொன்னது...
தொடர்புடைய விவரங்களை உலவி தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
1) For this, Procedure is needed. Most of the presiding Officers won't go for this. Because of the further head aches.
2) The person who voted 49-O is not kept secret as votes. But he can be easily identified by political or any person who needs. ( I think that may be the last vote in his life)
So this is one of the wonderful weapon which can't be used at all. this is one of the "LAW IN PAPER" .
Actually none of the party will encourage these things which leads to perfection.
If their is one of the option in the ballot for 49-0 , then it will do otherwise you have to select the less harmful predator from the list.
well said....
//1) For this, Procedure is needed. Most of the presiding Officers won't go for this. Because of the further head aches.//
ஜெயராஜன் சொன்னது...
Yes... you are right sir.. Though Rule 49 0 has prescribed a tiny procedure, it is not secret as in polling of vote...
//(I think that may be the last vote in his life)//
ஜெயராஜன் சொன்னது...
Well said... that's why no body comes forward to exercise this option.. I hope... the procedure must be amended ....
//If their is one of the option in the ballot for 49-0 , then it will do otherwise you have to select the less harmful predator from the list.//
ஜெயராஜன் சொன்னது...
You are conclusion is correct...
The procedure needs to be amended in such a way as to incorporate the 'not to vote option' in ballot paper itself.
The right of privacy should not be abridged in choosing this option..
There is no less harmful predator in politics.... seems all are more or less equal..
well said....
Advocate Jayarajan said...
தங்கள் கருத்துரைக்கு நன்றி
திரு. பழனிவேல் அய்யா..
//ஒருவர் தனது வாக்கை யாருக்கு பதிவு செய்தார் என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது. ஆனால் 49ஓ வில் பதிவு செய்யும் போது அவர் செயல் வாக்குசாவடியில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே 49ஓ வால் எந்த பயனும் இல்லை.//
Advocate Jayarajan said...
உண்மைதான்.. ஓட்டு போடுவதில் இரகசியம் பேணும் சட்டம், 'ஓட்டு போடுவதில்லை' என்பதை மட்டும் பகிரங்கமாக விளம்ப கட்டாயப்படுத்துகிறது. இதில் நியாயம்
இல்லை. அரசியலமைப்பு நமக்கு உத்திரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்றான 'அந்தரங்க உரிமையை' விதி 49O மீறுகிறது..
ஓட்டு போடுவதற்கு ஒரு சட்ட நடைமுறையும், ஓட்டு போடுவதில்லை என்று எடுத்த முடிவை பதிவு செய்வதற்கு மற்றொரு சட்ட நடைமுறையும் வகுக்கப்பட்டிருப்பது நியாயமற்ற பாகுபாடு காட்டுவதாக உள்ளது..
முன்னதாக "செந்தேள்" அய்யா சொன்னதைப் போல அப்படி ஓட்டு போடுவதில்லை என்று தெரிவிக்கும் வாக்காளருக்கு அதுவே கடைசி 'ஓட்டு போடுவதில்லையாக' அமையவும் வாய்ப்பு உண்டு..
எனவே தற்சமயம் பெரும் பயன் இல்லாத விதி 49O திருத்தப்பட்டால், மக்கள் கண்டிப்பாக அதை (தைரியமாக) பின்பற்றத் தொடங்கி விடுவார்கள்..
எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்?
அப்படியே பட்டன் வச்சாலும் அதை எண்ணிச் சொல்லும் நடைமுறையும் இல்லை. சும்மா, கவர்மென்ட் பஸ்ல முதலுதவி அப்படின்னு ஒரு பெட்டி இருக்கும். பெரும்பாலும் அதுல என்ன இருக்கும்ன்னு ட்ரைவருக்குகூட தெரியாது ..ஏதாவது இருக்குமான்னே டவ்ட்டுதான்.... அதுபோலத்தான் இதுவும்
Election commission do not care about that votes just allow you to register your point thats all. :-((((
Please review this
/http://www.eci.gov.in/ElectoralLaws/HandBooks/MANUAL_OF_LAW_VOL_II.pdf
Page 99
49-O. Elector deciding not to vote.—If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form 17A and has put his signature or thumb impression thereon as
required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb
impression of the elector shall be obtained against such remark.
Page 123
64. Declaration of result of election and return of election.—The returning officer shall, subject to the provisions of section 65 if and so far as they apply to any particular case, then—
(a) declare in Form 21C or Form 21D, as may be appropriate, the candidate to whom the largest number of valid votes have been given, to be elected under section 66 and send signed copies
thereof to the appropriate authority, the Election Commission and the chief electoral officer; and (b) Complete and certify the return of election in Form 21E, and send signed copies thereof to
the Election Commission and the chief electoral officer.]
Worst part... :-((((
The final result sheet FORM 20A (Page 273) did not have the number for 49O ballets.
//ரொம்ப இம்சைப் படுத்துறானுக... 49ஒ க்கு ஒரு பட்டன் வச்சாப்போதாதா?
எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்?//
வழக்குரைஞர் ஜெயராஜன் சொன்னது..
பின்னூட்டத்திற்கு நன்றி கல்வெட்டு அய்யா...
சொன்னதைப் போல 49O-க்கு ஒரு பட்டன் வைத்திருந்தாலே போதும் மக்கள் ஓ...... போட்டு இருப்பார்கள்...
அப்படி ஒரேயடியா சொல்லி விட முடியாது என்றே நினைக்கிறன் அய்யா .. மக்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மை அதிகம் .. விவரம் சொல்லி பிரச்சாரம் பண்ணா, 49 O பட்டனையும் (இருந்தால்) அமுக்கி தங்கள் அரசியல் உரிமைகளை பயன்படுத்தி பார்ப்பாங்க...
ஆக விதி 49O திருத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது...
சரி.. இந்த பட்டனை மக்கள் அமுக்கி ஓட்டு போடாமல் இருந்து விட்டால் என்ன விளைவு ஏற்படும்....?
அவசியம் திருத்தப்பட வேண்டும்.
//சரி.. இந்த பட்டனை மக்கள் அமுக்கி ஓட்டு போடாமல் இருந்து விட்டால் என்ன விளைவு ஏற்படும்....?//
ம் ம் ம்....புரியவில்லை....
49ஓ க்கு பட்டன் இருக்கும் பட்சத்தில் , ஒருவர் (மிஸ்டர் எக்ஸ்)அதைப் பதிவது .."எனது ஓட்டைப் பெற நிற்கும் யாரும் தகுதியில்லை" என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்(1).
ஒருவர் (மிஸ்டர் எக்ஸ்)இப்படிச் செய்வதால் கள்ள ஓட்டு அவரின் பேரில் பதிவாக வாய்ப்பு இல்லை(2).
யாரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டு டி,வி முன் இருந்து மானாட மசிராட பார்ப்பதே வாழ்க்கை இலட்சியமாக இருக்கும் அன்பர்கள் , அவர்கள் கருத்தை ஆவணப்படுத்தலாம்(3).
***
இப்படி ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பதியப்பட்டால், மேற்கொண்டு என்ன செய்யலாம்? ..என்பது நன்கு அலசப்பட வேண்டிய ஒன்று.
//அவசியம் திருத்தப்பட வேண்டும்.//
ஜெயராஜன் சொன்னது...
இந்த பதிவிற்கு விவாதிக்க வந்து பின்னூட்டம் இட்ட அனைவரின் கருத்தும் "விதி 49 O திருத்தப்பட வேண்டும்" என்பதாகவே உள்ளது. நன்றி..
1. வேட்பாளரின் தகுதியை வாக்காளர் தீர்மானிக்கும் திறனை 49O பட்டன் பெற்று தருகிறது என்பது ஒரு நல்ல சங்கதி. கட்டாயம் வரவேற்கபட வேண்டிய ஒன்று.
//ஒருவர் (மிஸ்டர் எக்ஸ்)இப்படிச் செய்வதால் கள்ள ஓட்டு அவரின் பேரில் பதிவாக வாய்ப்பு இல்லை(2).//
2. கள்ள ஓட்டை தடுக்கிறது 49O பட்டன் என்பது அருமையானதொரு கருத்துப்படிவம். இன்றைய தேர்தல் நாகரிகத்திற்கு (?) வேண்டிய ஒன்று...
//யாரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டு டி,வி முன் இருந்து மானாட மசிராட பார்ப்பதே வாழ்க்கை இலட்சியமாக இருக்கும் அன்பர்கள் , அவர்கள் கருத்தை ஆவணப்படுத்தலாம்(3). இப்படி ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பதியப்பட்டால், மேற்கொண்டு என்ன செய்யலாம்? ..என்பது நன்கு அலசப்பட வேண்டிய ஒன்று.//
3. தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. இது கொஞ்சம் டேன்ஜர். அந்த 'மயிலாடும்' மக்களுக்காக சட்டப் பேரவையில் அல்லது நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லாது போகலாம்.. ஆட்சியின் பலனைப் பெற்றுத் தர பிரதிநிதி இன்றி அந்த தொகுதி ஆடும்..
அல்லது .......
குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் யாராவது வெல்லலாம்
அல்லது ........
நல்லவர்கள், வல்லவர்கள், மக்களுக்காக ஏதாவது நல்லது செய்தவர்கள் அல்லது செய்ய திரணி படைத்தவர்கள் மட்டுமே அந்த தொகுதியில் நிற்க முடியும் என்ற கருத்தை உருவாக்கலாம்.
இன்னும் சற்று மேலாக தங்கள் தொகுதிக்கு இன்னதெல்லாம் செய்தால்தான் ஓட்டு போடுவோம்... இல்லா விட்டால்.... விதி 49O பயன்படுத்தி நாங்கள் "மானாட.. மயிலாட..." பார்த்து கொண்டே இருப்போம் என்று முன்னதாகவே சில கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.. வாக்காளர்கள் கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடலாம்..
விதி 49O திருத்தினால் ஏற்படும் பலன் பற்றியும், அதற்கான பரிந்துரைகளை காரண காரியங்களுடன் இந்திய சட்ட ஆணையத்திற்கு முன் வைக்கவும் எனக்கு இந்த பின்னூட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.... குறிப்பாக "கல்வெட்டு" அய்யா இப்பதிவை நன்கு அலசி ஆராய்ந்து பல நல்ல கருத்து முனைகளை எடுத்து கூறியுள்ளார்.. அவருக்கு என் நன்றி.
எனது "சட்ட பார்வை" மாத இதழில் இந்த பதிவை இன்னும் செம்மைப்படுத்தி பின்னூடங்களை கோவையாக்கி வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன்..
வேறு யாரும் கருத்துரைகள் கொண்டிருந்தால், அதை தெரிவிக்கும்படி கேட்டு கொள்கின்றேன்.. நன்றி..
உண்மையாகவா ?
மிக்க நன்றி நண்பரே. என்னதான் கருத்துகளை சொல்லிக்கொண்டு இருந்தாலும் அதனை ஆக்கபூர்வமாக செயலில் இறங்கிச் சாதிப்பவர்களே(குறைந்த பட்சம் முயற்சி எடுப்பவர்கள்) உண்மையான நாயகர்கள்.
அவசியம் முன் வையுங்கள்.
நன்றி !!
'நமது சட்டப் பார்வை' இதழ் நிறைய சட்டப் பிரச்சனைகளை கையில் எடுத்து சாதித்து உள்ளது. அந்த வகையில் இதையும் முன் வைக்கப் போகிறது....
மீண்டும் நன்றி..
2. Our IPC in the whole is believed the best in the world if amended properly. So, this is one among them
3. This should be taken to the public, but we can't expect the party sympathisers, people voting for money and people doesn't care to cast their votes will hardly change.
4. The Govt(politicians) labelled into the extremists opposes election as Naxals. They will find no difference from them if we do this.
5. BUT THIS SHOULD BE PROPAGANDISED IN THIS ELECTION AND APPRECIATIONS FOR THIS POST AND TO GNANI WHO IS DOING THIS IN KUMUDHAM. KUMUTHAM!?
Thanks for comments and appreciations Sir..