51 நோய்களுக்கு மருந்தில்லையா?

 நமது நாட்டில் 1945 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது "தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ஆக்ட்" (The Drugs and Cosmetics Act, 1945) எனப்படும் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம். இது பின்னிட்டு வந்த பல ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் கூட ஒரு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம், நமது நாட்டில் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதாகும்.


 இச்சட்டத்தின் கீழ் விதிகள் இயற்றுவதற்கான அதிகாரத்தை பயன்படுத்தி அதே 1945 - ஆம் ஆண்டில் ""தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ரூல்ஸ்" கொண்டு வரப்பட்டது. இதுவும் செம்மையாக, காலத்திற்க்கு ஏற்றார் போல் திருத்தும் செய்யப்பட்டதாகும். இதன் கீழ் பின் இணைப்பு பட்டியலாக வரும் " Schedule J" ஆனது ஒரு விவகாரமான சங்கதியை சொல்கிறது. அதாவது அதன் கீழ் வரும் 51 நோய்களுக்கு மருந்து உண்டு என்றோ, அதை மருந்தால் தடுக்க முடியும் என்றோ கூறக்கூடாது, என்று அது விதிக்கிறது. அந்த 51 நோய்கள் இதோ.....
1. AIDS
2. Angina Pectoris
3. Appendicitis
4. Arteriosclerosis
5. Baldness
6. Blindness
7. Bronchial Asthma
8. Cancer and Benign tumour
9. Cataract
10. Change in colour of the hair and growth of new hair.
11. Change of Foetal sex by drugs.
12. Congenital malformations
13. Deafness
14. Diabetes
15. Diseases and disorders of uterus.
16. Epileptic-fits and psychiatric disorders
17. Encephalitis
18. Fairness of the skin
19. Form, structure of breast
20. Gangrene
21. Genetic disorders
22. Glaucoma
23. Goitre
24. Hernia
25. High/low Blood Pressure
26. Hydrocele
27. Insanity
28. Increase in brain capacity and improvement of memory.
29. Improvement in height of children/adults.
30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual performance
31. Improvement in the strength of the natural teeth.
32. Improvement in vision
33. Jaundice/Hepatitis/Liver disorders
34 Leukaemia
35. Leucoderma
36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure.
37. Mental retardation, subnormalities and growth
38. Myocardial infarction
39. Obesity
40. Paralysis
41. Parkinsonism
42. Piles and Fistulae
43. Power to rejuvinate
44. Premature ageing
45. Premature greying of hair
46. Rheumatic Heart Diseases
47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea
48. Spondylitis
49. Stammering
50. Stones in gall-bladder, kidney, bladder
51. Vericose Vein

 சட்ட வகைமுறையின்படி, "ஒரு மருந்து மேற்படி பட்டியலில் காணப்படும் நோய் மற்றும் பிணிகளை தடுக்கக்கூடும் அல்லது குணமாக்ககூடும் என்ற பொருள் படும்படி தோன்றக் கூடாது அல்லது அவ்வாறு தடுக்கும் என்றோ, குணப்படுத்தும் என்றோ உரிமை கோரக் கூடாது." [Diseases and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.]

மேற்கண்ட நோய் பட்டியலானது 1945 - ஆம் ஆண்டில் ""தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ரூல்ஸ்" -களின் விதி 106- லிருந்து பிறந்ததாகும். அந்த விதி 106 -இன் படி, "மருந்து பொருள் எதுவும் பின்னிணைப்பு பட்டியல் "ஜெ"-இல் குறித்துரைக்கப்பட்ட நோய்களில் அல்லது பிணிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என்ற பொருள் பட தோன்றக்கூடாது அல்லது உரிமை கொண்டாடக் கூடாது அல்லது அதை பயன்படுத்துபவருக்கு அது அப்படி தடுக்கலாம் அல்லது குணப்படுத்தலாம் என்ற எண்ணம் எதையும் கொடுக்கக் கூடாது" என்பதாகும். [Rule 106 of the Drugs and Cosmetics Rules.- Diseases which a drug may not purport to prevent or cure.—(1) No drug may purport or claim to prevent or cure or may convey to the intending user thereof any idea that it may prevent or cure one or more of the diseases or ailments specified in Schedule J.] 

ஆக மேற்கண்ட 51 நோய்கள் அல்லது பிணிகளுக்கு மருந்தில்லை என்று சட்டம் சொல்கிறது. இந்நிலைப்பாடு சரிதானா? அல்லது இச்சட்ட விதியை திருத்த வேண்டுமா? (கடந்த 2018 -இல் அறிமுகபடுத்தப்பட்ட திருத்த சட்ட முன்வடிவில் இது பற்றிய திருத்தும் ஏதுமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.)

Comments

//ஆக மேற்கண்ட 51 நோய்கள் அல்லது பிணிகளுக்கு மருந்தில்லை என்று சட்டம் சொல்கிறது. இந்நிலைப்பாடு சரிதானா? அல்லது இச்சட்ட விதியை திருத்த வேண்டுமா? //

காலம் மாற, கண்டுபிடிப்புகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த சட்டத்திற்கு அவசியம் திருத்தம் தேவை.

word verification ஐ எடுத்துவிடுங்கள். அது தேவையில்லாத ஒன்று. அதற்கு பதிலாக கமெண்ட் மாடரேசன் போட்டுக்கொள்ளுங்கள். கமெண்டை படித்து பார்த்து, நீங்கள் பின்னூட்டத்தில் போட ஏதுவாக இருக்கும்.
Maximum India said…
அன்புள்ள ஐயா

சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

மருந்துகளால் குணப் படுத்த முடியாததாக கருதப் பட்ட சில வியாதிகளை குணப் படுத்துகிறோம் என்று ஒரு சிலர் மக்களை ஏமாற்றுவதை தடுக்கும் உயரிய நோக்கத்துடனே இந்த சட்ட விதி முறை இயற்றப் பட்டதாக கருதுகிறேன். ஆனால் விஞ்ஞான உலகில் அறுபத்து நான்கு வருடம் என்பது பல யுகங்கள் போல ஆகும். இந்த கால இடைவெளியில் எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற பல சட்டங்களை காலத்திற்கு தகுந்தாற் போல மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
Maximum India said…
//word verification ஐ எடுத்துவிடுங்கள். அது தேவையில்லாத ஒன்று. அதற்கு பதிலாக கமெண்ட் மாடரேசன் போட்டுக்கொள்ளுங்கள். கமெண்டை படித்து பார்த்து, நீங்கள் பின்னூட்டத்தில் போட ஏதுவாக இருக்கும்.//

I also repeat it.
//மருந்துகளால் குணப் படுத்த முடியாததாக கருதப் பட்ட சில வியாதிகளை குணப் படுத்துகிறோம் என்று ஒரு சிலர் மக்களை ஏமாற்றுவதை தடுக்கும் உயரிய நோக்கத்துடனே இந்த சட்ட விதி முறை இயற்றப் பட்டதாக கருதுகிறேன்.//

இது தான் உண்மை
//ஆனால் விஞ்ஞான உலகில் அறுபத்து நான்கு வருடம் என்பது பல யுகங்கள் போல ஆகும். இந்த கால இடைவெளியில் எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற பல சட்டங்களை காலத்திற்கு தகுந்தாற் போல மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.//

அப்படியே என்றாலும் மாற்றம் தேவைப்படுவது, தேவையில்லாதது என்று பார்த்தால்

1. AIDS - குணப்படுத்தும் மருந்தில்லை. ஆணுறை காண்டம் விற்பனையை இந்த சட்டம் தடை செய்யவில்லை

2. Angina Pectoris - கட்டுப்படுத்த மருந்துள்ளது

3. Appendicitis - மருந்தில்லை. அறுவை சிகிச்சை தான்

4. Arteriosclerosis - குணப்படுத்தும் மருந்து கிடையாது

5. Baldness - குணப்படுத்தும் மருந்தில்லை

6. Blindness - குணப்படுத்தும் மருந்தில்லை. சில வகைகளுக்கு அறுவை சிகிச்சை உள்ளது

7. Bronchial Asthma - குணப்படுத்தும் மருந்தில்லை. கட்டுபடுத்தும் மருந்து மட்டுமே உள்ளது

8. Cancer and Benign tumour - குணப்படுத்தும் மருந்தில்லை. அறுவை சிசிச்சை மற்றும் கட்டுப்படுத்தும் மருந்து தான்

9. Cataract - குணப்படுத்தும் மருந்தில்லை. அறுவை சிகிச்சை தான்

10. Change in colour of the hair and growth of new hair. - குணப்படுத்தும் மருந்தில்லை

11. Change of Foetal sex by drugs.
குணப்படுத்தும் மருந்தில்லை

12. Congenital malformations
குணப்படுத்தும் மருந்தில்லை. வேண்டுமென்றால் ஆய்வு மூலம் கருக்கலைக்க வசதி உள்ளது

13. Deafness - குணப்படுத்தும் மருந்தில்லை. காது கேட்கும் கருவி உள்ளது

14. Diabetes - குணப்படுத்தும் மருந்தில்லை. கட்டுப்படுத்தும் மருந்து தான்

15. Diseases and disorders of uterus.
பெறும்பாண்மையான பிணிகளுக்கு
குணப்படுத்தும் மருந்தில்லை. அறுவை சிகிச்சை உள்ளது

16. Epileptic-fits and psychiatric disorders

சில வகை பிணிகளை குணப்படுத்தலாம்
சிலவற்றை கட்டுப்படுத்தலாம்

17. Encephalitis

சில வகைகளை குணப்படுத்தலாம்

18. Fairness of the skin

உங்களுக்கே தெரியும் !!!
குணப்படுத்தும் மருந்தில்லை.

19. Form, structure of breast

உங்களுக்கே தெரியும் !!!
மருந்தில்லை. அறுவை சிகிச்சை உண்டு

20. Gangrene

மருந்தில்லை. அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து

21. Genetic disorders

மருந்தில்லை

22. Glaucoma

சில வகைகளுக்கு மருந்து உள்ளது
சில வகைகளை கட்டுப்படுத்தலாம்

23. Goitre

சில வகைகளுக்கு மருந்து உள்ளது
சில வகைகளை கட்டுப்படுத்தலாம்

24. Hernia

மருந்து கிடையாது. அறுவை சிகிச்சை தான்

25. High/low Blood Pressure

கட்டுப்படுத்தலாம்
சில வகைகளை குணப்படுத்த அறுவை சிகிச்சை உள்ளது

26. Hydrocele

மருந்து கிடையாது
அறுவை சிகிச்சை தான்

27. Insanity

குணப்படுத்தும் மருந்தில்லை. கட்டுப்படுத்தலாம்

28. Increase in brain capacity and improvement of memory.

ஹி ஹி ஹி
குணப்படுத்தும் மருந்தில்லை.

29. Improvement in height of children/adults.

அறுவை சிகிச்சை உள்ளது

30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual performance

ஹா ஹா ஹா
குணப்படுத்தும் மருந்தில்லை.

31. Improvement in the strength of the natural teeth.

இதெல்லாம் ஓவர்
குணப்படுத்தும் மருந்தில்லை.

32. Improvement in vision

மருந்து கிடையாது
கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டியது தான்

அதே நேரம் விட்டமின் ஏ குறைப்பாட்டால் பார்வை குறைவு என்றால் விட்டமின் ஏ சாப்பிட வேண்டியது தான்

33. Jaundice/Hepatitis/Liver disorders

குணப்படுத்த மருந்து கிடையாது. மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/05/jaundice-after-hepatitis-b-vaccine.html சில வகைகளுக்கு மருந்து உள்ளது
சில வகைகளை கட்டுப்படுத்தலாம்

34 Leukaemia

ஒரே ஒரு வகையை மட்டும் குணப்படுத்த மருந்து உள்ளது
சில வகைகளை கட்டுப்படுத்தலாம்

35. Leucoderma

மருந்து கிடையாது
குணப்படுத்தும் மருந்தில்லை.

36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure.

ஹி ஹி ஹி
குணப்படுத்தும் மருந்தில்லை.

37. Mental retardation, subnormalities and growth

மருந்து கிடையாது
குணப்படுத்தும் மருந்தில்லை.

38. Myocardial infarction

செத்து போன இதய தசைகளை ஒன்றும் செய்ய முடியாது
குணப்படுத்தும் மருந்தில்லை.

39. Obesity

மருந்து உள்ளது !!! பக்க விளைவுகள் அதிகம்

அறுவை சிகிச்சையும் உள்ளது

40. Paralysis

மருந்து கிடையாது

சில வகை வாதங்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளது

41. Parkinsonism

குணப்படுத்தும் மருந்து இல்லை. கட்டுப்படுத்தலாம்

42. Piles and Fistulae

குணப்படுத்தும் மருந்து இல்லை.அறுவை சிகிச்சை தான்

43. Power to rejuvinate

ஹி ஹி ஹி
குணப்படுத்தும் மருந்து இல்லை.

44. Premature ageing

ஹி ஹி ஹி
குணப்படுத்தும் மருந்து இல்லை.

45. Premature greying of hair

குணப்படுத்தும் மருந்து இல்லை.

46. Rheumatic Heart Diseases

குணப்படுத்தும் மருந்து கிடையாது
ஆனால் மேலும் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க கட்டாயம் மருந்து சாப்பிட வேண்டும்

47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea

எத்தனை முறை தான் இது வரும்
குணப்படுத்தும் மருந்தில்லை.

48. Spondylitis

குணப்படுத்த மருந்து கிடையாது

49. Stammering

குணப்படுத்த மருந்து கிடையாது
ஆனால் சிகிச்சை உண்டு

50. Stones in gall-bladder, kidney, bladder

குணப்படுத்த மருந்து கிடையாது. அறுவை சிகிச்சை தான்

51. Vericose Vein

குணப்படுத்த மருந்து கிடையாது. அறுவை சிகிச்சை தான்

--

ஆக இந்த சட்டம் இன்று வரை செல்லுபடியாகும் என்றே நினைக்கிறேன்

இரத்த புற்று நோயை தவிர பிற விஷயங்களில் மாற்றம் இல்லை
இந்த பட்டியலில் இருக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு தான் போலி வைத்தியர்கள் கல்லா கட்டுகிறார்கள் என்பது முக்கிய விஷயம்

--

மூளை காய்ச்சலுக்கு (encephalitis) மருந்து உள்ளது.
ஆனால் மூளைக்காய்ச்சலின் பின் விளைவுகளுக்கு (post encephalitic sequelae) மருந்தில்லை
அடுத்ததாக

சட்டப்படி ”prevent or cure”

இந்த மருந்து இந்த நோயை தடுக்கும் என்றோ அல்லது நோயை முற்றிலும் குணப்படுத்தும் என்றோ கூறக்கூடாது என்று தான் சட்டம் கூறுகிறது

நீரிழிவு நோய் பாதக விளைவுகளை கட்டுப்படுத்தும் மருந்தை விற்க எந்த தடையும் இல்லை

எய்ட்ஸ் நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தை (zidovudine) இந்த சட்டம் தடை செய்யவில்லை

ஆனால் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்துவதாக கூறுவதைத்தான் சட்டம் தடுக்கிறது
அதே போல் ஆஸ்துமாவிற்கு பல மருந்துகள் உள்ளன
அவை எல்லாம் நோயை கட்டுப்படுத்த மட்டுமே செய்யும்
குணப்படுத்தும் மருந்து கிடையாது
அதே போல் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி - இது ஒரு குறிப்பிட்ட வகை மஞ்சள் காமாலையை மட்டுமே தடுக்க வல்லது.

எனவே இந்த மருந்து சாப்பிட்டால் எந்த வகை மஞ்சள் காமாலையும் வராது என்றோ அனைத்து வகை மஞ்சள் காமாலைக்கும் இது தான் மருந்து என்றோ யாரும் கூற முடியாது
மஞ்சள் காமாலை குறித்த எனது இடுகையை ஒரு முறை படித்து உங்கள் கருத்தை கூறலாம்
Maximum India said…
அன்புள்ள ப்ருனோ அவர்களே

பதிவில் குறிப்பிட்டுள்ள வியாதிகளுக்கு மருத்துவ மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அழகான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி.
இராவகன் அய்யா சொன்னது....

//காலம் மாற, கண்டுபிடிப்புகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த சட்டத்திற்கு அவசியம் திருத்தம் தேவை.//

"உண்மைதான் அய்யா."

//word verification ஐ எடுத்துவிடுங்கள். அது தேவையில்லாத ஒன்று. அதற்கு பதிலாக கமெண்ட் மாடரேசன் போட்டுக்கொள்ளுங்கள். கமெண்டை படித்து பார்த்து, நீங்கள் பின்னூட்டத்தில் போட ஏதுவாக இருக்கும்.//

"எடுத்து விட்டேன். வழிகாட்டியமைக்கு நன்றி. "
மேக்ஸிமம் இந்தியா சொன்னது....

//மருந்துகளால் குணப் படுத்த முடியாததாக கருதப் பட்ட சில வியாதிகளை குணப் படுத்துகிறோம் என்று ஒரு சிலர் மக்களை ஏமாற்றுவதை தடுக்கும் உயரிய நோக்கத்துடனே இந்த சட்ட விதி முறை இயற்றப் பட்டதாக கருதுகிறேன்.//

"அதுதான் நோக்கம். ஆனால் இன்னமும் சிலர் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்; நோயாளிகளும் ஏமாறிக் கொண்டே இருக்கிறார்கள்."

//எனவே இது போன்ற பல சட்டங்களை காலத்திற்கு தகுந்தாற் போல மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.//

"மாற்றம் வர வேண்டும்."
மதிப்பிற்குரிய உரிய புருனோ அய்யா அவர்களே,

உங்கள் ஆழ்ந்த மருத்துவ விளக்கம் மிகவும் பயனுடையது. நன்றி.

எனது அய்யம் : அலோபதி தவிர ஹோமியோபதி மருத்துவத்திலும் இந்த நோய்களுக்கு மருந்து இல்லையா?
//எனது அய்யம் : அலோபதி தவிர ஹோமியோபதி மருத்துவத்திலும் இந்த நோய்களுக்கு மருந்து இல்லையா?//

இல்லை

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, யூனானி, யோகா என்று எதை எடுத்துக்கொண்டாலும் இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை

உதாரணமாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்த அலோபதி மருந்தும் உள்ளது, ஹோமியோபதியும் உள்ளது

ஆனால் குணப்படுத்த மருந்தில்லை

அப்படி இருந்தால் நாட்டில் யாருக்குமே ஆஸ்துமா இருக்க கூடாதே :) :)
//ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, யூனானி, யோகா என்று எதை எடுத்துக்கொண்டாலும் இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை//

தெளிவான அதே நேரத்தில் திட்ட வட்டமான உங்கள் பதில் எனது பெரும் அய்யத்தை நீக்கிவிட்டது.

எனினும், நான் சொன்ன சட்ட விதி 106 ஆனது டிரக் மற்றும் காஸ்மடிக்ஸ் விதிகள், 2004இன் பகுதி 9-இல் வருகிறது. அது "ஹோமியோபதி மருந்துகள் தவிர பிற மருந்து பொருள்களை விவர சீட்டொட்டுதல் மற்றும் பொட்டலம் கட்டுதல்" (The Rule 106 of the Drugs and Cosmetics Rules, 2004 comes under Part IX - Labelling and Packing of Drugs Other Than Homoeopathic Medicines) என்று கூறுகிறது. இங்கு ஹோமியோபதி மருந்துகளை சட்டம் தவிர்த்துள்ளதன் மருத்துவ விளக்கம் தங்களை போன்ற மருத்துவர்களுக்குதான் தெரியும் என்று நினைக்கிறேன்..........
Anonymous said…
After taking the drug, if it not cures the above stated diseases, can we go for court for cheating case that this drug is not curing but stated that it will cure.