மென்டோஸ் மிட்டாயும் கோகோ கோலாவும் கலந்தால் மரணம்

மென்டோஸ் மிட்டாய் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவர். கடந்த வாரம் பிரேசில் நாட்டில் ஒரு சிறுவன் இந்த மிட்டாயை சாப்பிட்டு விட்டு கோகோ கோலா அருந்திய சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனான். இதே மாதிரி மரணம் ஓராண்டுக்கு முன்பு பிரேசில் நாட்டில் மற்றொரு சிறுவனுக்கும் ஏற்பட்டது.  மென்டோஸ் மிட்டாயை கோகோ கோலா/ பெப்சி பானத்துடன் கலந்தால் என்ன நடக்கிறது என்பதை பின்வரும் ஒரு எளிய ஆனால் அதிர்ச்சிகரமான சோதனை விளக்குகிறது.

எனவே மென்டோஸ் (போலோ) மிட்டாய் சாப்பிட்ட உடன் கோகோ கோலா அல்லது பெப்சி பானம் அருந்த வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.

இப்போது வேதனையை உண்டாக்கும் சோதனையை கவனிப்போம்.







என்ன பயங்கரம்? இந்த சோதனை நமது வயிறுக்குள் நடந்தால் என்னவாகும்  என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது. 

இது சற்றே பழைய சங்கதியாக இருந்தாலும், தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த இரண்டு வகைகளையும் விரும்பி சாப்பிடுவதால் அவர்களுக்கு பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். அதாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். அடுத்ததடுத்து வேண்டாம். 

மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

Comments

பகிர்வுக்கு நன்றி சார். அனைவரும் கண்டிப்பாக படித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விசயம்.
DHANA said…
பகிர்வுக்கு நன்றி!
Ahamed irshad said…
பகிர்வுக்கு நன்றி
Thomas Ruban said…
இது தொடர்பான சில youtube வீடியோக்கள்...

http://www.youtube.com/watch?v=K9zS04jAqrw
---------
http://www.youtube.com/watch?v=DLbkNg5NmtU&feature=related
------
பகிர்வுக்கு நன்றி சார்...
நன்றி அக்பர் சார்
//அனைவரும் கண்டிப்பாக படித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விசயம்//

குறிப்பாக குழந்தைகள்
நன்றி தனா சார்
நன்றி அஹமத் இர்ஷத் சார்
பின்னூட்டத்திற்கு நன்றி ரூபன் சார்
//இது தொடர்பான சில youtube வீடியோக்கள்...

http://www.youtube.com/watch?v=K9zS04jAqrw
---------
http://www.youtube.com/watch?v=DLbkNg5NmtU&feature=related//

பயங்கரமான காணொளி ...
தேடுதலுக்கு நன்றி ரூபன் சார்....
M.Mani said…
கோகோ கோலாவை நடிகர்களைக் கொண்டு விளம்பரம் செய்வதால் மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இதனைப்பருகுகின்றனர். இந்தப்பதிவை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.
மா.மணி
தவறான தகவல் திரு. ஜெயராஜன்.

இது போன்று பல்லாயிரம், பல கோடி நூறாயிரம் போலித் தகவல்கள் இணையத்தில் பரவலாக உலா வருவதுண்டு. பொதுத் தளத்தில் பகிரும் முன் சரி தேடுதளத்திலோ அல்லது கீழ்காணும் தளங்களிலோ சரிபார்த்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

http://www.snopes.com/horrors/freakish/mentos.asp

http://urbanlegends.about.com/library/bl_mentos_and_coke.htm
sakthi said…
எச்சரிக்கை பதிவிற்கு மிக்க நன்றி சார் ,
கடந்த வாரம் எனது நண்பர் ஒருவர் இந்த விஷயம் தெரிந்து இருந்தும் ,கோகா கோலாவும் ,மேன்தொசும் குடித்து வீரம் செய்வதாக கூறி இப்படி பட்ட முட்டாள் சாகசம் செய்தார் .இவரை போன்ற முட்டாள் எல்லாம் சாகச (முட்டாள்கள் )இப்படி பட்ட செயல்களை முயற்சி செய்ய வேண்டாம் என்று என் சார்பாகவும் ,பதிவாளர் ஐயா சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்
பின்னூட்டத்திற்கு நன்றி திரு மாணிக்கம் சார்
//தவறான தகவல் திரு. ஜெயராஜன். இது போன்று பல்லாயிரம், பல கோடி நூறாயிரம் போலித் தகவல்கள் இணையத்தில் பரவலாக உலா வருவதுண்டு. பொதுத் தளத்தில் பகிரும் முன் சரி தேடுதளத்திலோ அல்லது கீழ்காணும் தளங்களிலோ சரிபார்த்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள். http://www.snopes.com/horrors/freakish/mentos.asp http://urbanlegends.about.com/library/bl_mentos_and_//

தகவலுக்கு நன்றி திரு சுடுதண்ணி.

தங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று உலவினேன். அதில் மென்டோசும் கோகோ கோலாவும் சேர்ந்தவாறு சாப்பிட்டதால் மரணம் நிகழ்ந்தது என்பதற்கு அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிலேயே ஒரு எச்சரிக்கை பின்வருமாறு
விடுக்கப்பட்டுள்ளதை கவனித்தீர்களா?

Caveat: Though there is no evidence to date proving that the simultaneous consumption of Mentos and carbonated beverages has caused anyone serious physical harm, I don't recommend trying it. I really don't.

அத்தளம் அவ்வாறு சாப்பிடுவதை பரிந்துரை செய்யவில்லை.
//கடந்த வாரம் எனது நண்பர் ஒருவர் இந்த விஷயம் தெரிந்து இருந்தும் ,கோகா கோலாவும் ,மேன்தொசும் குடித்து வீரம் செய்வதாக கூறி இப்படி பட்ட முட்டாள் சாகசம் செய்தார்//

பின்னூட்டத்திற்கு நன்றி திரு சக்தி...

உடலுக்கு, அதன் நலனுக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்பதை தெரிந்திருந்தும் அதை எதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
கோகோ கோலா போன்ற சோடா பானங்களில் கார்பன் டையாக்சைடு அழுத்தமாக சேர்க்கப்படுகிறது. அப்பானம் அடங்கிய புட்டியின்/டின்னின் மூடியை நீக்கியவுடன் அழுத்தமான (அதாவது பொத்தி வைக்கப்பட்ட) கார்பன் டையாக்சைடு, அதனுடன் சேர்க்கப்பட்ட தண்ணீருடன் கலந்து வாயுக் குமிழிகளாக விரிவடைந்து வெளியாகிறது. இங்கு கார்பன் டையாக்சைடும் தண்ணீரும் மிக நெருங்கிய நண்பர்கள். எளிதில் ஒட்டிக் கொள்வர். இவ்வாறு தண்ணீருடன் கார்பன் டையாக்சைடு வாயு கலக்கப்படுவதால் அவ்வாயு மட்டும் தனியாக பிரிந்து ஒட்டு மொத்தமாக அல்லது உடனடியாக வெளியேறும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. இதனால் அப்பானத்தின் மேற்பரப்பில் நிலவும் இறுக்கம் (அது அடங்கிய புட்டியின் மூடியை திறக்கும் வரை) அப்படியே அமைதியாக உள்ளது. புட்டியின் மூடியை திறந்தவுடன் கார்பன் டையாக்சைடு குமிழிகள் பானத் தண்ணீரிலிருந்து மெல்ல மெல்ல வெளியாகிறது.

கோகோ கோலா/பெப்சி பானத்துடன் மென்டோஸ் சேர்க்கும் போது அப்பானத்தின் மேற்பரப்பு இறுக்கம் பரபரப்படைகிறது. புட்டியிலிருந்து எல்லா பானத்தையும் ஒன்றாக ஒரு வெடிகுண்டு வெடிப்பதை போல வெளியே தள்ளி விட வேண்டும் என்ற ஆவேசம் உருவாகிறது. இதற்கு காரணம் மென்டோஸ் மிட்டாயில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய மூலப் பொருட்கள்தாம். அவை, (1 ) சர்க்கரை சேர்த்த ஜெல் (candy - gelatin); (2 ) இந்த ஜெல்லை கெட்டியாக்கும் பசை (இது acacia என்ற மரத்திலிருந்து பெறப்படுவதாகும்). மென்டோசின் வெளிப்புற பரப்பு கோகோ கோலா பானத்தின் மேற்பரப்பை தொடும் போது அங்கு ஒரு மைய ஆற்றல் (nucleation sites) உருவாகிறது. இது மெல்ல உருவாகும் குமிழிகளை அதிவேகமாக உருவாவதை ஊக்குவிக்கின்றன. அழுத்தி வைக்கப்பட்ட கார்பன் டையாக்சைடு வாயு குபீரென பொங்கி வெளியேறுகிறது. புட்டியின் வாய் சிறியது என்பதால் நீரூற்றாக பீய்ச்சி அடிக்கிறது. இது கண் கொள்ள காட்சிதான். ஆனால் நம் வயிறு கொள்ளுமா?
raamraam said…
thank you very much